மூட்டு வலி



வயதானவர்களைத் தாக்கும் நோய்களுள் முக்கியமானது மூட்டுவலி. இந்தப்பிரச்சினை இல்லாத இடமே உலகத்தில் இல்லை.

காரணங்கள்

மூட்டுவலி கீழ்காணும் காரணங்களால்
ஏற்படலாம்.

  • மூட்டு வலி வரக் காரணம் மூட்டு தேய்மானமே.
  • உடல் எடை அதிகமாக இருப்பதே இதற்கு முக்கியக் காரணமாகும். கால்சியம் சத்துக் குறைவு, நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமை, உடலில் தோன்றும் ரசாயன மாற்றங்கள், இளவயதில் உடற்பயிற்சி செய்யாமை போன்றவையும் மூட்டுவலிக்கு காரணமாக அமைகின்றன.

  • ஆர்த்ரைடிஸ் (மூட்டுவலி) ருமாடாய்ட், ஆஸ்டியே ஆர்த்ரைடிஸ் மற்றும் கீல்வாதம் (கெளட்) அல்லது லூபாஸ் போன்ற இணைப்பு திசுக்களில் ஏற்படும் கோளாறுகள்
  • கால்முட்டி அடிக்கடி அழுத்தத்திற்கு உட்படுவதால் முட்டியை சுற்றியுள்ள கப் வடிவிலான சவ்வு காயமடைவது (அதிக நேரம் முட்டியிடுவதால், அதிகமாக மூட்டுகளை பயன்படுத்தும் போது உதாரணம் நடப்பது ஓடுவது மற்றும் காயங்கள் ஏற்படுவது)டெண்டிரைடிஸ் (தசைநார் பாதித்தல்)- முட்டியின் முன்பகுதியில் வலியிருக்கும், மாடிப்படி ஏறி இறங்கும்போது மற்றும் சாயும்போது வலியின் தன்மை அதிகரிக்கும்.

ஓட்டப்பந்தைய வீரர்கள் மற்றும் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு இவை ஏற்படும் பேக்கர்ஸ் சிஸ்ட் - கால்முட்டியின் பின்புறத்தில் நீர்நிறைந்த பை போன்று வீக்கம் காணப்படுதல். இந்த பை போன்ற சிஸ்ட் உடையும்போது வலி ஏற்பட்டு இந்த வலி முழுங்காலுக்கு கீழ் பரவும் கார்டிலேஜ் என்னும் எலும்பில் உள்ள திசுக்கள் கிழிவது அல்லது உடைவது. இதனால் முட்டியின் உள் ெவளி பகுதிகளில் வலி ஏற்படுத்தும் எலும்புகளை ஒன்றோடு ஒன்றாக இணைக்கும் தசை நார் கிழிதல் - இதனால் வலி மற்றும் முட்டியை செயல்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது

சுளுக்கு, மூட்டுக்களை முறுக்குவதால் எலும்புகளை இணைக்கும் தசைநார்களில் ஏற்படும் சிறுசிறு காயங்கள் முட்டியின் சிப்பி இடமாற்றம் அடைவது மூட்டுகளில் நோய் தொற்றுவது மூட்டுகளில் ஏற்படும் காயங்களால் முட்டியினுள் இரத்த கசிவு ஏற்பட்டு வலியை அதிகப்படுத்தும் இடுப்பில் ஏற்படும் குறைபாடுகள் அல்லது கோளாறுகள். இதனால் இடுப்பில் வலி ஏற்படும். இந்த வலி முட்டிப் பகுதிகளில் உணரப்படும்.

உதாரணம் ஈலியோடிபியல் சின்ட்ரோம் - அதாவது இடுப்பிலிருந்து மூட்டி பகுதிக்கு செல்லும் கயிறுபோன்ற அமைப்பில் காயம் ஏற்படுதல் எளிமையான பராமரிப்பு முைறகள்

மூட்டு வலிக்கு பல காரணங்கள் உண்டு. குறிப்பாக அதிக உடற்சார்ந்த செயல்கள் வலியினை ஏற்படுத்தும். கீழ்கண்ட பராமரிப்பு முறைகளை மேற்கொள்வதால் வலியிலிருந்து மீளும் சாத்தியக்கூறுகள் அதிகம்.

• வலியை அதிகப்படுத்தும் செயல்களை (உதாரணம் -பழுதூக்குதல்) தவிர்த்து ஓய்ந்திருக்க வேண்டும்.

• நன்கு நேராக நிமிர்ந்து, உட்கார, நிற்க பழக வேண்டும். நிற்கும்பொழுது பாதங்களை சற்று அகற்றி வைத்து நிற்பதால் உடல் எடை சமமாகப் பரவும். தோள்களை சரியான நிலையில் வைப்பதாலும், முதுகுத் தண்டை நிமிர்த்தியபடி உட்காருவதாலும் நல்ல பலன் கிடைக்கும்.

• `ஹைஹீல்ஸ்’ காலணிகளைத் தவிர்க்க வேண்டும். இது இடுப்பு மற்றும் கால் மூட்டுகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும்.

• நடக்கும் போதும், உடற்பயிற்சி செய்யும் போதும் அதற்கென உள்ள காலணிகளைப் பயன்படுத்த வேண்டும். கண்டிப்பாக வருடத்திற்கு ஒருமுறை காலணி களை மாற்ற வேண்டும்.

• எந்த வேலையையும் ஒரேடியாக செய்யாமல் சிறிது இடைவெளி விட்டு செய்யலாம்.

• வலியின் தன்மை, வலி கூடும், குறையும் நேரம், உடற்பயிற்சி செய்யும் அளவு, எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள் போன்றவற்றை மருத்துவரிடம் செல்லும்போது தெரிவிக்க வேண்டும்.

• நிம்மதியான தூக்கம் உடலை அமைதியாகவும், தளர்வாகவும் ஆக்குகிறது. தூங்கும்போது மூட்டுகளும் தளர்வடைகின்றன. 7 முதல் 9 மணி நேர தூக்கம் கட்டாயம் தேவை. பகல் உணவுக்குப் பின் 10-20 நிமிடங்கள் ஓய்வெடுப்பது மூட்டு வலியை நன்கு குறைக்கும்.

• மூட்டிகளின் கீழ் அல்லது இடையில் தலையணைகளை வைத்து உறங்கலாம்.

• அதிக காய்கறி, பழங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். கால்சியம் சத்து நிறைந்த பால் பொருட்களை தேவைக்கேற்ப எடுத்துக் கொள்ளலாம். உப்பைக் குறைத்துக் கொள்வது நல்லது.• உடற்பயிற்சி தசைகளை வலிமைப்படுத்துகிறது. எளிமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டாலே நல்ல மாற்றத்தை உணர முடியும்.

• வலியை மறப்பதற்கு மற்ற விஷயங்களில் கவனத்தை திசை திருப்ப வேண்டும். வலியைப் பற்றியே நினைக்கும் பொழுது நோயின் தீவிரம் அதிகமாகத் தெரியும்.

0 comments:

Your Comments Please!

இது பற்றிய உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்.Comments பதிவதில் சிரமம் ஏற்பட்டால் உங்கள் கருத்துக்களை adiraipoonga@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனே பதியப்படும்.