குழந்தைகளுக்கு ஆரோக்கியமான மாலை சிற்றுண்டி



குழந்தைகள் மாலைநேரமானால்  விளையாடி களைத்து வீட்டிற்கு வருவார்கள். விளையாடி வரும் அவர்களுக்கு அதிகமா பசி வரும். அப்படி வரும் குழந்தைகளுக்கு முக்கியமாக தேவைப்படுவது ஆரோக்கியமான புரதச்சத்து நிறைந்த உணவு.
அவ்வாறு கொடுத்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, எந்த ஒரு நோயும் உடலை அண்டாமல் இருக்கும். 

எப்போதெல்லாம் குழந்தைகள் பசிக்கிறது என்று சொன்னாலும் ஏதாவது கண்டகண்டதை கொடுத்து அவர்கள் உடலை கெடுக்காமல், ஆரோக்கியமான உணவுகளை கொடுங்கள். சரி அப்படி எந்த உணவுகளில் ஆரோக்கியம் மற்றும் புரதச்சத்து நிறைந்து உள்ளது என்று பார்ப்போம். 

சான்விட்ச் 
சான்விட்ச், தானியங்களால் செய்யப்படும் பிரட்-ஆல் செய்யப்படுதால், இது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான ஒன்று. மேலும் இதில் கொழுப்புக்கள் குறைவாக இருக்கும். பட்டர், சீஸ் மற்றும் கேரட், வெள்ளரி போன்றவற்றை வைத்து அலங்கரித்து, அதன் மேல் உப்பு, மிளகுத்தூள் தூவி குழந்தைகளுக்குக் கொடுத்தால், அவர்கள் அதை விரும்பி சாப்பிடுவாங்க. இது ஒரு சுவையான, ஆரோக்கியமான  ஈவினிங் ஸ்நாக்ஸ். 

தயிர் 
வளரும் குழந்தைகளுக்கு கால்சியம் சத்து மிகவும் அவசியம். ஏனென்றால் கால்சியம் அதிகமாக இருந்தால் தான் எலும்புகள் மற்றும் பற்கள் வலுவாக இருக்கும். தயிர், பால் போன்றவற்றில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. சில குழந்தைகளுக்கு பால் சுவை பிடிக்காது. ஆகவே தயிரில் சிறிது சர்க்கரை சேர்த்து லஸ்ஸி செய்து கொடுங்கள், அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். 

தானியங்கள் 
சோளம், கம்பு போன்ற தானியங்களை வறுத்து ஈவினிங் டைம் கொடுக்கலாம். ஏனென்றால் அதில் வைட்டமின்கள் மற்றும் தாதுச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. இரு ஒரு சிறந்த ஈவினிங் ஸ்நாக்ஸ்.

பழங்கள் 
ஆப்பிள், கொய்யா, ஆரஞ்சு போன்றவற்றை சிறிது சிறிதாக நறுக்கி, அதில் சிறிது உப்பு, மிளகுத்தூள் தூவி கொடுத்து பாருங்கள், அதன் சுவையே சுவை தான். 

இத்தகைய உணவுகளை ஈவினிங் ஸ்நாக்ஸ்-ஆக கொடுத்துப் பாருங்கள், அவர்கள் விரும்பி உண்பதோடு, அது அவர்களுக்கு மிகுந்தஆரோக்கியத்தையும் தரும்.

தொகுப்பு: பாத்திமா

0 comments:

Your Comments Please!

இது பற்றிய உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்.Comments பதிவதில் சிரமம் ஏற்பட்டால் உங்கள் கருத்துக்களை adiraipoonga@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனே பதியப்படும்.