கோடை காலத்தில் நம்மை பாதுகாக்க...


    முன்பெல்லாம் ஏப்ரல்,மே மாதங்களில் தான் தமிழகத்தில் குறிப்பாக நம் அதிரையில் கோடை வெயில் உச்சத்தில் இருக்கும்.ஆனால் இப்போது ஜூலை மாதத்தில் கூட உச்ச கோடை தான்.கஜா புயலுக்குப் பிறகு நம் ஊரில் வெப்பத்தின் தாக்கமும், மனிதர்களுக்கு ஏற்படு்ம் நோய்களின் வீரியமும் மிகுதியாக உள்ளது.எனவே நாம்
நம்மையும் நம் குழந்தைகளையும் கவனமாக பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.பெற்றோராகிய நாம் படித்தவரோ,படிக்காதவரோ பின்வரும் சில எளிய குறிப்புகளைக் கடைப்பிடித்தல், நலம் பயக்கும்!

முதலில் இயன்ற வரை நம்மையும் நம் குழந்தைகளையும் நம் வீட்டையும் சுற்றுபுறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.அது நம்மை நோயில் இருந்து காக்க உதவும்.அதனால் நாம் அல்லது கணவர் கடினமாக உழைத்துச் சேர்த்த பணத்தை மருத்துவமனைகளில் வரிசையில் காத்து நின்று இழப்பதையும் தவிர்க்கலாம்.

சரியான,பாதுகாப்பான,தரமான மற்றும் சத்தான உணவுகள், நீர்ச்சத்து நிறைந்த திரவ உணவுகள்,இளநீர்,மோர்,கடல்பாசி,வீட்டில் தயார் செய்த பழச்சாறு(ஜூஸ்) ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.எண்ணெய் உணவுகளை தவிர்த்தல் நல்லது.

மென்மையான பருத்தி(Cotton) ஆடைகளை நாமும் நம் குழந்தையும் அணியலாம்.

வெயிலில் குழந்தைகளை விளையாட அனுமதிக்க வேண்டாம். அது உடல் வறட்சி மற்றும் தோல் நோய்களில் இருந்து காக்கும்.

பள்ளி செல்லும் குழந்தைகள், மற்ற நோயுற்ற குழந்தையிடமிருந்து நோயைத் தொற்றிக் கொண்டுவர வாய்ப்புகள் அதிகம்.

சில நம் அதிரைப்பெண்கள் நோயுற்ற தன் குழந்தையை, நோய் குணமான பிறகு பள்ளிக்கு அனுப்பினால் போதுமானது என்று பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள்  எவ்வளவு அறிவுரை சொன்னாலும் அதைக் கேட்காமல்,தான் நிம்மதியாக இருப்பதற்காக,குழந்தையை இடைஞ்சலாக நினைத்து, இரண்டொரு நாளில் நோய் குணமாகுமுன்பே,அவசரப்பட்டு பள்ளிக்குஅனுப்பிவிடுகின்றனர்.

[இங்கு "இடைஞ்சல்" என குறிப்பிடுவது யாரையும் புண்படுத்தும் நோக்கில் அல்ல.சிலர் சீரியல் பார்க்க, வாட்சப் போன்ற சமூக வலைதளங்கள் பயன்படுத்த, உறவினர் அல்லது மற்றவர்களிடம் புரளிக்கதைகள் பேச தன் குழந்தை இடைஞ்சல் என்று கருதுகின்றனர்.]
அது மற்ற குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்பட வழிவகுக்கிறது.எனவே இதை தவிர்த்தல் நல்லது.

0 comments:

Your Comments Please!

இது பற்றிய உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்.Comments பதிவதில் சிரமம் ஏற்பட்டால் உங்கள் கருத்துக்களை adiraipoonga@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனே பதியப்படும்.