நிம்மதியான இரவு தூக்கத்துக்கு....


பெண்கள் நிம்மதியாக தூங்கி எழுந்தால்தான், வீட்டில் அனைத்து காரியங்களும் சிறப்பாக நடைபெறும் என்பது அனைவரும் அறிந்ததே. பெண்களுக்கு மட்டுமல்ல அனைவரும் நிம்மதியாக உறங்க சில டிப்ஸ்...
* தூங்குவதற்கு முன் சுகமான குளியலை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இளம் சூடான பால் நல்லது.

* டி.வி., கம்ப்யூட்டர் உள்ளிட்டவற்றை தூங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே அணைத்துவிடுங்கள்.


* இரவு 10 அல்லது 11 மணிக்கு முன்பே தூக்கத்துக்குத் தயாராகுபவர்கள்தான், நிம்மதியான உறக்கத்தில் ஈடுபடுவார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

* இரவு சாப்பாட்டுக்கும் தூக்கத்துக்கும் இடையே 90 நிமிட இடைவெளி அவசியம். அதிக சாப்பாடு தூக்கத்தைக் கெடுத்துவிடும்.

* தினமும்
அரை மணி நேரம் எளிய உடற்பயிற்சி, ஆழ்ந்த தூக்கத்துக்கு வழி வகுக்கும்.

* தூங்குவதற்கு முன்பு மனதுக்கு மிகவும் பிடித்தமான விஷயங்களை அசைபோடுங்கள். மனதை அமைதிப்படுத்த இது உதவும்.

* கனமான, அசெகரியமான ஆடைகளைத் தவிர்த்து, இலகுவான ஆடைகளை அணிந்து கொள்ளுங்கள்.
* வீட்டின் பொருளாதார பிரச்னைகள் குறித்து அறவே சிந்திக்கவோ, பேசவோ செய்யாதீர்கள்.

0 comments:

Your Comments Please!

இது பற்றிய உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்.Comments பதிவதில் சிரமம் ஏற்பட்டால் உங்கள் கருத்துக்களை adiraipoonga@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனே பதியப்படும்.