குழந்தைகளுக்கு ஏற்படும் உடல்பருமன்



குழந்தை குண்டாக இருப்பது தான் ஆரோக்கியம் என்ற எண்ணம் அம்மாக்கள் மத்தியில் ஊறிப்போன விஷயம்.ஆனால் உடல் பருமன் பெரியவர்களுக்கு எந்தளவிற்கு ஆபத்தோ அதுபோல் தான் குழந்தைகள்
விஷயத்திலும்!

குழந்தை தானே வளர வளர சரியாயிடும் என பெற்றோர் அலட்சியமாக நினைக்கின்றனர்.அது மிகவும் தவறானது.

குழந்தை குண்டாக இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.
  • குடும்ப பாரம்பரியம்,
  • "ஹைப்போ தைராய்டிசம்" எனப்படும் தைராய்டு குறைவாக சுரத்தல்,
  • நீரிழிவு நோய்,
  • அதிக கொழுப்பு சேர்ந்த "பீட்சா" போன்ற "பாஸ்ட் புட்"கலாச்சாரம்,
  • நடையை மறந்து எல்லாவற்றுக்கும் வாகனத்திலும்,லிப்டிலும் செல்லுதல்,
  • உடற்பயிற்சி இல்லாமல் எந்நேரமும் கம்ப்யூட்டர்,டி.வி அல்லது வீடியோ கேம்ஸ் என்று ஒரே இடத்தில் தொடர்ந்து உட்கார்ந்தே இருத்தல்  
ஆகியவை இதற்கு காரணங்கள் ஆகும்.

அது மட்டுமில்லாமல்,குழந்தை பிறந்ததும் தாய்ப்பால் கொடுக்காமல் “டின்” பால் கொடுக்கப்படுகிறது. அந்த பருவத்தில் தாய்ப்பாலைத் தவிர இதர பால் உணவுகள் குழந்தையின் உடலில் அதிக அளவில் கொழுப்புத்திசுக்களை உற்பத்தி செய்து விடுகிறது,அந்த திசுக்கள் குழந்தையின் உடலை பருமனாக்கி விடுகிறது.

கணவன்,மனைவி இருவரும் வேலைக்குப் போகும் வீடுகளில் தனித்து விடப்படும் குழந்தைகள் தன்னை அறியாமல் அதிக அளவில் உண்பதால் அந்த குழந்தைகள் உடல்பருமனால் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

குழந்தைகளின் உடல் எடையை குறைப்பதற்கு சில எளிய வழிகள் உள்ளன.
  1. குழந்தைகளுக்கு உணவுக்கட்டுப்பாடு தேவையில்லை.ஆனால் உடற்பயிற்சி பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
  2. அளவான உடலமைப்பு தான் அழகானது,ஆரோக்கியமானது என்ற எண்ணத்தை அவர்கள் மனதில் பதியச் செய்ய வேண்டும்.
  3. பள்ளிக்கூடம் விட்டு வீட்டிற்கு வரும் குழந்தையை சிறிது நேரம் ஓடியாடி விளையாட அனுமதிக்க வேண்டும்.
  4. வீட்டிற்குள்ளேயே ஏதேனும் உடற்பயிற்சி கருவிகளை வாங்கி வைத்து குழந்தையை உடற்பயிற்சி செய்ய தூண்டலாம்.
  5. குழந்தைகளுக்கு பாக்கெட் உணவுகளை வாங்கிக் கொடுக்காமல்,வேர்க்கடலை, சுண்டல் போன்ற பாரம்பரிய உணவுகளை செய்து கொடுத்து அதை உண்பதால் ஏற்படும் நன்மைகளை எடுத்துச் சொல்லி புரிய வைக்கலாம்.
  6. சிப்ஸ்,சாக்லேட்,ஐஸ்கிரீம் போன்றவைகளை வாங்கி கொடுப்பதை குறைத்துக் கொண்டு அதிக அளவில் காய்கறிகள் மற்றும் பழங்களை உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
ஆக குழந்தைகளுக்கு ஆரோக்கியமான, அளவான உணவு கொடுத்து அவர்களை உடற்பயிற்சி செய்யவும், விளையாடவும்,சைக்கிள் ஓட்டவும்,வாக்கிங் போகவும் ஊக்குவித்து, அவர்களின் உடல் இயக்கத்திற்கு வேலைக் கொடுத்தாலே குழந்தைகளுக்கு ஏற்படும் உடல்பருமன் என்ற பிரச்சினையை தீர்க்கலாம்.


0 comments:

Your Comments Please!

இது பற்றிய உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்.Comments பதிவதில் சிரமம் ஏற்பட்டால் உங்கள் கருத்துக்களை adiraipoonga@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனே பதியப்படும்.