அதிரை மக்களுக்கான நலத்திட்டங்கள்- AAMF






30.09.2011 அன்று துபையில் நடைபெற்ற அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் அந்த அமைப்பின் நோக்கங்கள்
தெளிவாக விளக்கப்பட்டது.

அதன் நோக்கங்கள் பரந்த மனப்பான்மையோடும்,தொலைநோக்கு பார்வையோடும் இருப்பதை பாராட்ட வேண்டும்.

அதன் நோக்கங்கள் வருமாறு:
  • தெருக்களுக்கு இடையே நெடுங்காலமாக நிலவும் ஏற்றத்தாழ்வுகளை ஒழித்தல்.
  • ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் எந்த அரசியல் கட்சியை அல்லது அமைப்பை சேர்ந்தவராக இருப்பினும் ஊர்நலன் என்று வரும்போது அனைவரும் ஒற்றுமையோடு ஒருங்கிணைந்து செயல்படுதல்.
  • நம் அதிரையில் அனாச்சாரங்கள் பெருகி வருகின்றன.நம்மூரில் 30க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் இருப்பினும் தொழுவதற்கு போதுமான ஆட்கள் வருவதில்லை.இது போன்ற பிரச்சினைகளை உலமாக்கள் அறிந்தும் அவர்களுக்குள் உள்ள கருத்து வேறுபாட்டால் இந்த பிரச்சினைகளை தீர்க்க முன்வருவதில்லை.எனவே உலமாக்களுக்கு இடையில் இருக்கும் கருத்து வேறுபாடுகளை சரிசெய்வது
  • ஊரில் உள்ள அனைத்து முஹல்லாக்களுக்கும் வளர்ச்சித்திட்டங்கள் தீட்டி செயல்படுத்துதல்.
  • ஊரிலுள்ள மாணவர்கள்,ஆசிரியர்கள்,எழுத்தாளர்கள்,அறிஞர்பெருமக்கள்,கல்வியாளர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து கல்வி வழிகாட்டல் மற்றும் சேவை மையம் அமைப்பது. அதன் மூலம் நம் இளைய சமுதாயாத்திற்கு கல்வி,அரசு வேலைவாய்ப்பு குறித்த தகவல்களை வழங்கி மனிதவளம் மேம்பாடு அடையச் செய்தல்.
  • நம்மூரில் இலவச சட்ட உதவி மையம் அமைத்து நம் மக்களுக்கு தேவைப்படும் சட்ட ஆலோசனைகளை வழங்குதல்.
  • அனைத்து முஹல்லாவிலும் வசிக்கும் 10,11,12 வகுப்புகள் மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு உடற்பயிற்சிக்கூடம் அமைத்தல்.மேலும் அவர்களுக்கு தகுந்த பயிற்சிகள் வழங்கி சீருடை வழங்கி,சமூக சேவையில் ஈடுபடுத்துதல்.
  • பெண்கல்விக்கு முக்கியத்துவம் அளித்தல்.மேலும் பெண்களை மருத்துவம் பயிலவும், அரசியலில் ஈடுபடவும் ஊக்குவித்தல்.
  • விவாகரத்து வழக்குகள் நடைபெறும்போது சங்கங்கள் சம்பந்தப்பட்ட பெண்ணின் கருத்தையும் கேட்டு அறிய ஏற்பாடு செய்தல்.
  • நம் அதிரை மக்களுக்கு கல்வி,வேலைவாய்ப்பு,அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு மாத இதழ் வெளியிட்டு,அதை எல்லா வீடுகளுக்கும் கிடைக்கச் செய்தல்.

பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
  • தீர்மானம் 1:
அமீரகம் வாழ் அதிரை அனைத்து முஹல்லா சகோதர்களும் ஒன்றிணைந்து, “அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு” ஏற்படுத்தியுள்ளது போன்று தாயகத்திலும் நமதூர் அனைத்து முஹல்லா சங்க நிர்வாகிகளும் ஒன்றுகூடி 'அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு' என்ற பெயரிலேயே உருவாக்க வேண்டும்.
  • தீர்மானம் 2:
தற்போது நமதூரில் இரவு நேரங்களில் நோய் ஏற்படுகிறவர்களுக்கு முதல் உதவி வழங்குவதற்கு எவ்வித ஏற்பாடுமின்றி மக்கள் சிரமங்களை சந்திக்கிறார்கள். நமதூரில் உருவாகிற அ.அ.மு.கூ- நமதூரில் மருத்துவப்பணி செய்துவரும் டாக்டர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, மக்கள் படும் சிரமங்களுக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும்.

குறிப்பு: சூழற்சி முறையில் டாக்டர்களில் ஒருவருடைய மருத்துவமனை மற்றும் ஒரு மெடிக்கலும் 24 மணி நேர சேவை செய்ய வலியுறுத்த வேண்டும்.
  • தீர்மானம் 3:
ஷிஃபா மருத்துவமணை நமதூர் பொது மக்கள்களிடமும், வெளிநாடு வாழ் அதிரை சகோதரர்களிடமும், பொது வசூல் செய்து துவங்கப்பட்டது. அதற்கு அமீரகம் வாழ் நமதூர் சகோதரர்களில் பலர் தங்களுடைய ஒரு மாத சம்பளத்தை நன்கொடையாக அளித்தார்கள். ஆனால் ஷிஃபா மருத்துவமணையின் தற்போதைய செயல்பாடுகளும், அங்கு நிலவுகிற சூழ்நிலைகளும் மிகுந்த கவலையளிக்கிறது. நமதூர் மக்களுக்கு அனைத்து வகை மருத்துவத்திற்கும் பயன்படும் வகையில் அம்மருத்துவமனையை மேன்மைப்படுத்த அ.அ.மு.கூ-பின் அதிரை நிர்வாகம் முழு கவனம் செலுத்த வேண்டும்.
  • தீர்மானம் 4:
தக்வா பள்ளி அருகிலுள்ள மார்கெட்டில் உள்ள கடைகளிலிருந்து மிக குறைந்த வாடகை வசூலிக்கப்படுவதாகவும், ஆனால் மீன் மார்கெட்டில் விற்கப்படுகிற மீன் விலையோ தமிழகத்தில் எங்கும் இல்லாத விலை விற்கிறார்கள் என்றும் அமீரகம் வாழ் நமதூர் மக்கள் புகார் தெரிவிக்கிறார்கள். அதுபோன்று ஆட்டுக்கறி மற்றும் கோழிக் கறி விற்பனை செய்யும் கடைகளில் அறுக்கப்படும் ஆடுகளும், கோழிகளும் மார்க்கம் வலியுறுத்துகிற முறை பின்பற்றப்படுகிறதா என்ற சந்தேகம் ஏற்படுகிற சூழ்நிலை அங்கு நிலவுவதாக பலர் தெரிவிக்கிறார்கள். மீன் மார்கெட்டில் உள்ள கடைகளின் வாடகையை உயர்த்துவதற்கும், மீன், ஆட்டுக் கறி, கோழி கறி ஆகிவைகளின் விலையை குறைப்பதற்கும், ஆடு,மாடு,கோழி அறுப்பதற்கும் ஒரு சீரான முறையை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ள அ.அ.மு.கூ-பின் அதிரை நிர்வாகத்தை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
  • தீர்மானம் 5:
அமீரகத்தில் வாழ்கிற நமதூர் சகோதரர்களில் பலர், 15 வருடங்களுக்கு மேல் இங்கு பணிகள் செய்து அவர்களோடு கூட பிறந்த சகோதரரிகளின் திருமணத் தேவையை பூர்த்தி செய்வதற்கே அவர்களுடைய முழு வாழ்க்கையை களித்துவிட்டதாகவும், ஆனால் தாங்கள் திருமண செய்து சந்தோசமாக வாழ வழியில்லாத சூழ்நிலை நமதூரில் நிலவுவதை பலர் எண்ணி கண்ணீர் சிந்துகிறார்கள்.
அதுமட்டுமின்றி இதனால்தான் நமதூரில் விற்கப்படுகிற மனைகட்டுகளின் விலை தமிழ்நாட்டில் எங்குமில்லாத விகையில் தாருமாராக உயர்வதற்கு காரணங்களாக உள்ளது. தயவு செய்து இஸ்லாம் வலியுறுத்துகிற துளிகூட பெண் வீட்டாரிடத்திலிருந்து வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ வரதட்சணை இல்லாத, மஹர் கொடுத்து திருமணம் செய்யும் முறையை, நமதூர் அனைத்து முஹல்லா சங்க நிர்வாகிகளும் போர்கால அடிப்படையில் ஒவ்வொரு முஹல்லாவிலும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
குறிப்பு: நமதூரில் வீட்டு மனைகள் விற்பனை செய்யும் முகவர்களிடம் அ.அ.மு.கூ-ன் சார்பாக, மனைகளின் விற்பனை விலையை கட்டுக்குள் வைக்குமாறு வேண்டுகோள் விடுக்க வேண்டும்.


நோக்கங்களும்,தீர்மானங்களும் உயர்ந்தவையாகவே உள்ளன.இவை வெறும் நோக்கமாகவும்,ஒரு கூட்டத்தில் பேசப்பட்ட வார்த்தைகளாகவும் மட்டும் இருந்துவிடாமல்,அவற்றை நடைமுறைப்படுத்தி ஊர் மக்கள் நலனை மேம்படுத்த வேண்டியது அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு மற்றும் அதிரை ஐக்கிய ஜமாஅத் ஆகியோரின் கடமையாகும்.

இந்த எல்லா நோக்கங்களையும்,தீர்மானங்களையும் சம்பந்தப்பட்டவர்கள் செய்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பத்தில் ஒன்று பதினொன்று என்று ஆகிவிடாமல்,இந்த அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு, சிறந்த அமைப்பாக சிறப்புற்று விளங்க இறைவனிடம் பிரார்த்திப்போம்.


0 comments:

Your Comments Please!

இது பற்றிய உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்.Comments பதிவதில் சிரமம் ஏற்பட்டால் உங்கள் கருத்துக்களை adiraipoonga@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனே பதியப்படும்.