ஜில்லுனு சில தகவல்கள்



தேர்தல் முடிவுகள் வெளியாகி தமிழகம் முழுவதும் பரபரப்பு நிகழும் இச்சூடான வேளையில்,நாம் ஜில்லுனு சில தகவல்களைப் பார்ப்போம்.

சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை எல்லா வயதினரும் விரும்பி மகிழ்ந்து உண்பது,ஐஸ்கிரீம்
என்றால் அது மிகையாகாது.தற்போது பல்வேறு "பிராண்டு" பெயர்களில் புதிதுபுதிதாக ஐஸ்கிரீம்கள் அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றன.அவை
நம் நாவிற்கு இனிய சுவையூட்டுகின்றன.

இதே ஐஸ்கிரீமை முதல் முதலில் ருசித்த பெருமைக்கு உரியவர்கள் யார் தெரியுமா?

ரோமானிய அரச குடும்பத்தினரே!

அதை அவர்கள் தயார் செய்ய, படாத பாடுபட்டார்கள். தேவையான ஐஸ் கட்டிக்காக அடிமைகளை குதிரையில் மலை உச்சிக்கு அனுப்பி விடுவார்கள். அங்கே படிந்து கிடக்கும் பனிப்பாறைகளை வெட்டி எடுத்துக்கொண்டு வேக வேகமாக வர வேண்டும். ஐஸ் கட்டிகள் வருவதற்குள், அரண்மனையில் பழங்களையும், தேனையும் கலந்து ஒருவித ஜாம் செய்து வைத்திருப்பார்கள். அதனுடன் பனிக்கட்டிகளை போட்டு, ஒரு கலக்கு கலக்கி ஐஸ்கிரீம் போன்று செய்து சாப்பிடுவார்கள். மேலும், இதனுடன் ஒயினையும் சேர்த்து உண்டு மகிழ்ந்திருக்கிறார்கள்.

சரி, ஐஸ்கிரீமின் வரலாற்றுத் தகவலை ஜில்லுனு தெரிந்து கொண்டோம்.அதன் முக்கிய சிறப்பைப் பற்றி இப்போது பார்ப்போம்.

சுமாரான விருந்தில்கூட இறுதியில் ஐஸ்கிரீம் வைப்பதன் மூலம் அதைச் சிறந்த விருந்தாகக் கருதச் செய்துவிட முடியும்.

ஐஸ்கிரீம் சாப்பிடும்போதும சாப்பிட்டு முடித்த பிறகும் சிறிது நேரத்திற்கு மனதில் அமைதியும் மகிழ்ச்சியும் தொடர்ந்து இருப்பதை நாமே தெளிவாக உணரமுடியும். இந்த இனிமை நீடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் பலர் ஐஸ்கிரீமிற்குப் பிறகு தண்ணீர் அருந்துவதில்லை.

வாழ்வில் திடீரென்று ஏற்படும் நெருக்கடி, மன அழுத்தம், தவிர்கக முடியாத அவசர நிலை முதலிய நேரங்களில் சுறுசுறுப்பாக சிந்தித்து செயல்பட வேண்டுமானால், ஐஸ்கிரீம் சாப்பிட்டுப் பாருங்கள் என்கிறது கலிபோர்னியா பல்கலைக்கழகம்.

அதற்குக் காரணம்,ஐஸ்கிரீம் சாப்பிட்டவுடன் அது மூளையில் "செரோட்டினின்" என்ற இரசாயனப் பொருளை நன்கு சுரக்கச் செய்யத் தூண்டிவிடுகிறது. செரோட்டினின் சுரந்தால் மன அழுத்தம் உடனடியாகக் குறைய ஆரம்பித்துவிடுகிறது.

அது ஐஸ்கிரீமுக்கே உரிய தனிச்சிறப்பாகும்.எனவே அது போன்ற நெருக்கடியான சமயங்களில் ஐஸ்கிரீம் சாப்பிடலாம்.

இன்னுமொரு முக்கியமான விஷயம்,சர்க்கரை நோய் உள்ளவர்கள் பல் தொந்தரவு உள்ளவர்கள் மிகப்பருமனானவர்கள் மட்டும் ஐஸ்கிரீமைத் தவிர்ப்பது நல்லது.


0 comments:

Your Comments Please!

இது பற்றிய உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்.Comments பதிவதில் சிரமம் ஏற்பட்டால் உங்கள் கருத்துக்களை adiraipoonga@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனே பதியப்படும்.