வைட்டமின் D (Vitamin D)




உடல், மன ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது வைட்டமின்கள் எனப்படும் உயிர்சத்துக்கள்தான். இவை நமது உடலில் பிற சத்துக்களுடன் சரிவிகிதத்தில் சேர்வதனாலேயே நமக்கு முழுமையான ஆரோக்கியம் கிடைக்கிறது.
உடலுக்கு உயிர்சத்துக்களை நீண்டகாலம் தேக்கி வைக்கும் தன்மை கிடையாது. தினமும் உயிர்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், கீரைகள், பழங்கள் மற்றும் குறிப்பிட்ட சில அசைவ உணவுகளை சாப்பிடுவதால் இவை நமது உடலுக்கு கிடைக்கின்றன.

வைட்டமின் D மனித உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் அழகையும் கொடுக்கிறது.

வைட்டமின் D, எலும்புகளின் வலிமையை அதிகரிப்பதோடு நமது உடல், கால்சியத்தை உறிஞ்சவும் உதவுகிறது என்பதை நெடுங்காலமாக ஆராய்ச்சியாளர்கள் அறிவர்.

ஆனால் 2007-ம் ஆண்டில் வெளியான ஆய்வு முடிவுகள் கூடவே வேறு பல ஆதாயங்களையும் வைட்டமின் D நமக்குத் தருகிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
  • நோய்களைத் தடுக்கக்கூடிய ஆற்றல் இதற்குண்டு. 
  • 'வைட்டமின் D ' அதிகமாக உள்ள உணவு டயாபடீஸை விரட்டுகிறது; 
  • பல் ஈறுகளில் ஏற்படும் நோய்களையும் விரட்டுகிறது. 
  • திசு கடினப்படுதல் எனப்படும் மல்டிபிள் ஸ்லெரோஸிஸ் (multiple sclerosis) நோயையும் இந்த 'வைட்டமின் D ' விரட்டுகிறது. 
  • ஏன்..? கேன்ஸர் நோயைக்கூட உருவாகாமல் தடுக்கும் சக்தி 'வைட்டமின் D '-க்கு உண்டு என தற்போதைய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. 
  • பெருங்குடலில் ஏற்படும் கேன்ஸரை அது தீர்க்கவல்லது என்கிற லேட்டஸ்ட் தகவல் நமக்கொரு நல்ல செய்திதான்! 
வைட்டமின் ‘D’ யை நமது உடல் சூரிய ஒளியின் உதவி கொண்டு உற்பத்தி செய்து கொள்கிறது. அதிகாலை சூரிய ஒளியிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்கள் உடலின் சருமப் பகுதியில் படுகிறது. சருமத்தில் உள்ள திசுக்களால் வளர்சிதை மாற்றம் அடைந்து வைட்டமின் ‘D’ உற்பத்தி செய்யப்படுகிறது.

வைட்டமின் ‘D’ பொதுவாக இரண்டு வகைப்படும்.
1.வைட்டமின் ‘D2’,
2.வைட்டமின் ‘D3’

வைட்டமின் ‘D2’ தாவரங்களின் மூலம் அதாவது காய், கனிகள், கீரைகள் மூலம் உடலுக்கு கிடைக்கிறது.
வைட்டமின் ‘D3’ சூரிய ஒளியின் மூலம் தான் உடலுக்கு கிடைக்கிறது.
வைட்டமின் ‘D3’ ஆனது உடலின் இரத்த ஓட்டத்தை சீர்செய்து உடலுக்குத் தேவையான கால்சியம், பாஸ்பரஸ் போன்றவற்றை உட்கிரகிக்க உதவுகிறது.

தினமும் 3 மணி நேரம் சூரிய ஒளி நம்மீது பட்டால், மார்பக புற்றுநோய் வரவே வராது என்கிறார்கள் கனடா நாட்டு ஆராய்ச்சியாளர்கள். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

சூரிய ஒளி நம்மீது படும்போது, வைட்டமின் D உற்பத்தி தூண்டப்படுகிறது. மார்பக செல்கள், வைட்டமின் D-யை, ஒருவித ஹார்மோனோக மாற்றும் திறன் பெற்றவை.

இந்த ஹார்மோன்தான், மார்பகத்தில் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. இளம், நடுத்தர, வயதான பெண்களிடம் ஆய்வுகள் நடத்தப்பட்டு இது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆண்களை பொறுத்தவரை, வைட்டமின் D மாரடைப்பு போன்ற ஆபத்துகளில் இருந்து காக்கிறதாம்.

ஆகவே 'வைட்டமின் D 'யை நாள்தோறும் நம் உணவில் சேர்க்க வேண்டியது நமது கடமையாகும்!

வைட்டமின் ‘D’சத்து நிறைந்துள்ள உணவுகள்



பால், மீன், முட்டை, மீன் எண்ணெய், மாமிசம், வெண்ணெய், காய்கறிகள், கீரைகள், பருப்பு வகைகள், கொட்டைகள் போன்றவற்றில் அதிகம் கிடைக்கிறது.

ஆனால் இயற்கையாக கிடைக்கும் சூரிய ஒளியின் மூலமே அதிக வைட்டமின் ‘D’ உடலுக்கு கிடைக்கிறது.

வைட்டமின் ‘D’ உடலுக்கு கிடைக்க தினமும் காலை அல்லது மாலை வெயிலின் ஒளியானது உடம்பில் படுமாறு பார்த்துக்கொள்வது நல்லது.

வைட்டமின் ‘D’ சத்து குறைந்தால்
  • வைட்டமின் ` D ' குறைந்துவிட்டால்,எலும்புகள் வலுவிழந்துவிடும். 
  • நரம்புகளில் பாதிப்புகள், பற்கள் கோளாறு முதலியவை உண்டாகும். இது தவிர பித்த நீரில் கோளாறு உருவாகும்.
  • பெரியவர்களுக்கு அடிக்கடி சோர்வு ஏற்படுதல், சர்க்கரையானது அடிக்கடி சிறுநீர் மூலமாக வெளித்தள்ளப்படுதல், முதுமைத்தன்மை விரைவில் ஏற்படுதல் போன்றவை ஏற்படும்.
  • இந்த வைட்டமின் ‘D’ சத்து குறைந்தால் ரிக்கட்ஸ் என்ற நோயின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும்.
வைட்டமின் ` D ' போதிய அளவு இல்லாத குழந்தைகளின் கால்கள் வில் போல் வளைந்துவிடும். வயிறு ஊதும்.போதுமான சூரிய வெளிச்சம் குழந்தைக்குக் கிடைத்தால் அதன் உடலே வைட்டமின் ` D 'யை தயாரித்துக் கொள்ளும்.
அதிகாலை 7 ம‌ணி வெ‌யி‌‌லி‌ல் நா‌ம் ‌நி‌ன்றா‌ல் நம் சரும‌ம் 'வை‌ட்ட‌மி‌ன் D'யை உருவா‌க்‌கி‌க் கொ‌ள்ளு‌ம்.

ரிக்கட்ஸ் நோயின் அறிகுறிகள்
  • ஒன்றரை வயதில் மூடவேண்டிய உச்சந்தலைக் குழி மூடாமல் இருத்தல்.
  • தலை எலும்புகளின் வளர்ச்சி குன்றி, தலையில் முன் பக்கம் பெரிதாக இருத்தல், சத்து குறைவான நிலை முக்கியமாக இரும்பு மற்றும் புரதக் குறைவு உண்டாதல்.
  • கை, கால் முட்டி தடித்து இருத்தல், நெஞ்சு எலும்புக் கூடாக இருத்தல். கூன் விழுந்த முதுகு இவை அனைத்துமே ரிக்கட்ஸின் அறி குறிகளாகும்.

நீரிழிவு,உயர் இரத்த அழுத்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வைட்டமின் ‘D 3’ உற்பத்தி குறைவாகவே இருக்கும்.

வைட்டமின் ‘D’ சத்துள்ள உணவுகளை உண்டு அதன் பலனை அடையலாம்.

வைட்டமின் ‘D’-ன் பயன்கள்

* எலும்புகளை பலப்படுத்தும்
* உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும்.
* எலும்பு புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கிறது.
* குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.
* வயதானவர்களின் எலும்பு பலவீனத்தைப் போக்குகிறது.
* தசைகளின் இளக்கத்தைத் தடுக்கிறது.
* மூட்டுகளில் உண்டாகும் வலியை தடுக்கும் குணம் இதற்குண்டு.
* நரம்பு, எலும்பு சந்திப்புகளை பலப்படுத்துகிறது.
* சருமத்தை நோயிலிருந்து பாதுகாக்கிறது.
* ரத்தத்தில் உள்ள சர்க்கரையை எரிக்க வைட்டமின் D மிகவும் பயன்படுகிறது.
* சிறுநீரகத்தின் செயல்பாடுகளை சீராக்குகிறது.திசுக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

0 comments:

Your Comments Please!

இது பற்றிய உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்.Comments பதிவதில் சிரமம் ஏற்பட்டால் உங்கள் கருத்துக்களை adiraipoonga@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனே பதியப்படும்.