சிக்கனமாக இருப்பது எப்படி?



எவ்வளவு வருமானம் உள்ளவருக்கும் சிக்கனம் என்பது நன்மை தரும். வீட்டுக்குள் `இதிலென்ன பெரிதாக செலவாகி விடப் போகிறது?’ என்று நாம் நினைக்கும் விஷயங்கள் சிறுகச் சிறுகச் செலவைக் கூட்டும்
`சிறுதுளி பெருவெள்ளம்என்பது சேமிப்புக்கு மட்டுமல்ல, செலவு வைக்கும் விஷயங்களுக்கும் பொருந்தும்.
வீட்டுக்குள் சிக்கனமாக இருப்பதற்கான சில `டிப்ஸ்இங்கே… 
  • வழக்கமான குண்டு பல்புகளுக்குப் பதிலாக `காம்பாக்ட் புளோரசன்ட் விளக்குகளைப் பயன்படுத்துங்கள்
  • வீட்டை விட்டு வெளியே புறப்படும்போது அனைத்து விளக்குகளையும், மின் உபகரணங்களையும் அணைக்க மறக்காதீர்கள்
  • `சார்ஜர்களைஅணைத்து விடுங்கள். அவை `சார்ஜிங்செய்யாவிட்டாலும் மின்சாரத்தை ஈர்த்துக் கொண்டிருக்கின்றன என்பதை மறக்கக் கூடாது
  • பாத்ருமில் ஷவரில் குறைவாகத் தண்ணீர் விழுமாறு அமைத்துக்கொள்ளுங்கள். அது தண்ணீர் சிக்கனத்துக்கு உதவும்
  • நீங்கள் பல் துலக்கிக் கொண்டிருக்கும்போது ஷவரில் தண்ணீர் கொட்டிக் கொண்டிருக்க வேண்டாம்
  • `இங்க் கேட்ரிட்ஜ்’, `சிடிக்கள்’, `டிவிடிக்கள்போன்ற கணினி பயன்பாட்டுப் பொருட்கள் பெரும்பாலானவை மறுபயன்பாட்டுக்கு உரியவையாக உருவாக்கப்பட்டுள்ளன என்பதை ஞாபகத்தில் வையுங்கள். கம்ப்யூட்டர் இணைப்பு வயர்கள், `ஸ்பீக்கர்கள்போன்றவற்றுக்கும் இது பொருந்தும்.
  • துணிகள் அல்லது பாத்திரங்கள் அதிகமாக இருக்கும்போது மட்டும் `வாஷிங் மெஷின்அல்லது `டிஷ் வாஷரைபயன்படுத்துங்கள். ஆனால் கொள்ளளவில் பாதி இருக்கும் நிலையில் அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தால், `ஹாப் லோடுஅல்லது `எகானமி செட்டிங்கை அமைத்துக் கொள்ளுங்கள்
  • `ஏசிஇருந்தால் அதன் `ஏர் பில்டரைமாதம் ஒருமுறையாவது சுத்தம் செய்யுங்கள் அல்லது மாற்றி விடுங்கள்
  • எப்போதாவது பயன்படுத்தும் மின் உபகரணங்களின் `பிளக்கை மாட்டியே வைத்திருக்காதீர்கள்.
  • புதிதாக மின் உபகரணங்கள் வாங்கும்போது அவை மின்சக்தியை சேமிக்கும் திறன் பெற்றவை என்பதற்கான `எனர்ஜி ஸ்டார் லேபிளைபார்த்து வாங்குங்கள்
  • மின் சக்தியை அதிகமாகச் `சாப்பிடும்பழைய உபகரண ங்களுக்கு விடை கொடுத்து, புதியவற்றை வாங்குங்கள்
  • தண்ணீரைச் சுட வைப்பதற்கு சூரிய சக்தியைப் பயன்படுத்தும் வழியைப் பாருங்கள்
  • எங்காவது தண்ணீர் கசிந்து கொண்டிருக்கிறதா என்று பார்த்து உடனே சரிசெய்யுங்கள்.

0 comments:

Your Comments Please!

இது பற்றிய உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்.Comments பதிவதில் சிரமம் ஏற்பட்டால் உங்கள் கருத்துக்களை adiraipoonga@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனே பதியப்படும்.