AAMF துபை- ஹஜ் பெருநாள் சந்திப்பு 2011



அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்று (06-11-2011)  ஞாயிற்றுக்கிழமை துபாய் டேரா ஈத்கா மைதானத்தில் அதிரைவாசிகள் 300 க்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடினர். அல்ஹம்துலில்லாஹ்.
காலை 6:50 மணிக்கு ஹஜ் பெருநாள் தொழுகை முடிந்து பராஹா சாலை வாசல் அருகே கூடிய அதிரைவாசிகளுக்கு, அதிரை அனைத்து முஹல்லா சார்பில் ஹஜ் பெருநாள் வாழ்த்து அட்டையும் சாக்லெட்டும் இணைக்கப்பட்ட வரவேற்பு அன்பளிப்பு வழங்கப்பட்டது. சுமார் 350 எண்ணிக்கையில் விநியோகிக்கப்பட்டதாக அனைத்து முஹல்லா ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் தெரிவித்தனர்.

அனைத்து முஹல்லா ஜமாத் கூட்டமைப்பு சார்பில் மேலத்தெரு,கீழத்தெரு, நெசவுத்தெரு,தரகர் தெரு,கடற்கரை தெரு,மிஸ்கீன் பள்ளி மற்றும் சம்சுல் இஸ்லாம் சங்க துபை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதன் காணொளி மற்றும் புகைப்படங்கள் விரைவில் அதிரையின் பிரபல வலைத்தளங்கள் அனைத்திலும் பதிவேற்றம் செய்யப்படும்.

1 comments:

Anonymous said...

அனைவருக்கும் இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்!

Your Comments Please!

இது பற்றிய உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்.Comments பதிவதில் சிரமம் ஏற்பட்டால் உங்கள் கருத்துக்களை adiraipoonga@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனே பதியப்படும்.