தி.நகர் கடைகளுக்கு சீல்!



சென்னை தியாகராய நகரில் விதி மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் பணியில் சி.எம்.டி.ஏ. அதிகாரிகளும், மாநகராட்சி அதிகாரிகளும் திங்கட்கிழமை முதல் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஒவ்வொரு கடைக்கும் பக்கத்தில் 5 அடி இடம் விட வேண்டும், முன்புறம் 10 அடி இடம் விட வேண்டும் என்ற குறைந்தபட்ச விதிகளை கூட பின்பற்றாமல் இவர்கள் கடைகள் கட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீல் வைக்கப்பட்டுள்ள கடைகளுக்கு செவ்வாய்கிழமையன்று மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதில் வேலை பார்த்த ஊழியர்கள் சுமார் 2 ஆயிரம் பேர் வேலையின்றி தவிக்கின்றனர்.

மாநகராட்சி அதிகாரிகள் தினமும் அந்த பகுதி கடைகளை கண்காணித்து வருவதால் தியாகராயநகரில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. சீல் வைக்கப்பட்ட கட்டிடங்களில் உள்ள கடையை திறக்கக்கூடாது என்று அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.

சீல் வைக்கப்பட்ட சில கட்டடங்கள்
  • டெக்ஸ்டைல் இந்தியா, 
  • காதிம்ஸ், 
  • பாபு ஷூ மார்ட், 
  • மீனாட்சி ரியல் எஸ்டேட், 
  • சரவணா இனிப்பகம், 
  • ஜெயசந்திரன் டெக்ஸ்டைல்ஸ், 
  • ஷோபா ஸ்டோர்ஸ், 
  • சண்முகா ஸ்டோர்ஸ், 
  • ரத்னா ஸ்டோர்ஸ் (ரங்கநாதன் தெரு மற்றும் உஸ்மான் சாலை), 
  • சாட் வணிக வளாகம், 
  • தி சென்னை சில்க்ஸ்,
  • ஸ்ரீ குமரன் தங்க மாளிகை,  
  • என்.எஸ். ராமநாதன் நகைக் கடை, 
  • உமர்கயாம் உணவகம், 
  • ஸ்ரீதேவி தங்க மாளிகை, 
  • அர்ச்சனா ஸ்வீட்ஸ், 
  • கேசர் வேல்யூ அலுவலகம் ஆகிய வளாகங்களுக்கும் மற்றும் 
  • ஜெ.சுந்தரலிங்கம், எஸ்.சீனிவாசன், ராஜரத்தினம், சித்திரபாண்டியன், அழகு, முகமது சித்திக், சீனிவாசலு செட்டி ஆகியோரின் கட்டடங்களுக்கும் சீல் வைக்கப்பட்டது.
சென்னை தி.நகரில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களுக்கு சீல் வைத்ததைத் தொடர்ந்து அடுத்து பாரிமுனை, புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சில்லரை வணிகத்தில் அந்நியர்கள் கால்பதித்து விட்ட நிலையில் தி.நகர் சீல் வைப்பு நடவடிக்கை உள் நாட்டு சில்லரை வணிகத்தை நிலை குலையச் செய்து விடும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் கூறியுள்ளார்.

0 comments:

Your Comments Please!

இது பற்றிய உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்.Comments பதிவதில் சிரமம் ஏற்பட்டால் உங்கள் கருத்துக்களை adiraipoonga@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனே பதியப்படும்.