மைக்ரோவேவ் அவன் சமையலால் நமக்குக் கிடைப்பவை



மைக்ரோ வேவ் அவனில் சமைக்கப்படும் உணவுப் பொருட்கள் கடுமையான மூலக்கூறு சிதைவுக்கு உட்படுகின்றன. அத்தகைய உணவுகளை உண்பது இரத்தத்தில் மாற்றங்கள் ஏற்படுத்துவதோடு உடலின் நோயெதிர்ப்பு தன்மையையும் பாதிப்பதை புதிய ஆராய்ச்சி முடிவுகள் காட்டுவதாக
Dr.மெர்கோலா தெரிவிக்கிறார்.
அனேக மக்கள் இது பற்றிய விழிப்புணர்வின்றி அலட்சியமாக இருக்கிறார்கள்.

மைக்ரோவேவ் அவன்களில், மின் - காந்த அலை, ஒரு மெலிந்த குழாய் வழியே செல்லும் போது, வைக்கப்பட்டிருக்கும் உணவுப் பொருள் மீது, மாறுதிசை மின்னோட்ட இயல்புடன் விழுகிறது. மாறுதிசை மின்னோட்டத்தின் இயல்பு, ஒரு மூலக்கூறில் உள்ள நேர் - எதிர் துருவங்களை, மாற்றி அமைப்பது தான். இதனால், மைக்ரோவேவ் அவனில் வைக்கப்படும் உணவுப் பொருளில் உள்ள ஒவ்வொரு மூலக்கூறும், நேர் திசை - எதிர்திசை சுழற்சிக்கு உட்படுகிறது. ஒரு நொடிக்கு, குறைந்தபட்சம் 2,000 முறை, மூலக்கூறுகள், சுழற்சிக்கு உட்படுகின்றன.
சுழற்சியின் போது மூலக்கூறுகள் ஒன்றின் மேல் ஒன்று மோதி, உணவில் சூட்டை ஏற்படுத்துகிறது. இந்த துருவ மாற்றம் மற்றும் மோதலால், உணவுப் பொருளின் மூலக்கூறு அமைப்பே மாறுபட்டு விடுகிறது.

அதாவது, நமக்கு "ஷாக்" அடித்தால் உடலுக்கு என்ன ஆகுமோ, அதை போல் தான் உணவுக்கும் மைக்ரோவேவ் அவனில்நடக்கிறது. இந்த உணவைச் சாப்பிடுவோர் உடலில் பல பாதிப்புகள் ஏற்படும்.

பாதிப்புகள் என்னென்ன?
  •  ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைகிறது.
  • உடலுக்கு நன்மை விளைவிக்கும் எச்.டி.எல் கொழுப்பு (HDL Cholestrol), குறைகிறது.
  •  நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும், ரத்த வெள்ளை அணுவில் காணப்படும், “லிம் போஸைட்குறைகிறது.
  •  ரேடியோ கதிர்கள் ஊடுருவிய உணவுப் பொருட்களைச் சாப்பிட நேர்கிறது. இதனால் புற்றுநோய் ஆபத்து ஏற்படுகிறது.
  •  உணவுப் பொருட்களின் சத்து குறைகிறது. மாறுபட்ட மூலக்கூறுகளுக்கு நம் உடல் பரிச்சயப்படாததால், அவற்றை ஜீரணிக்க முடியாமல், அவை உடலிலேயே தங்குகின்றன. இதனால், உடலில் பல்வேறு உபாதைகள் ஏற்படுகின்றன.
  •  வயிறு, குடல் புற்றுநோய் உருவாகிறது. ரத்தத்தில் புற்றுநோய் செல்கள் வளர வழி வகுக்கிறது.
  • உடலின் முக்கிய சுரப்பிகள் செயலிழக்கின்றன. இதனால், நோய் எதிர்ப்புத் திறன் குறைகிறது. நினைவுத் திறன், கவனம், மன வலிமை, சாதுர்யம் ஆகியவை குறைகின்றன.

 சூரியனிடமிருந்து கூட, மின்காந்த அலைகள் வெளிப்படுகின்றன. அவை பாதிப்பு ஏற்படுத்துவதாக யாரும் கூறவில்லையே?’ என கேட்கலாம். அவை, நேரடி மின்னோட்ட இயல்புடன், பூமியின் பரந்த பரப்பளவை அடைகின்றன. இதனால், பூமியில் காணப்படும், உயிருள்ள - உயிரற்ற எந்தப் பொருளுக்கும் பாதிப்பு ஏற்படுவதில்லை.

அமெரிக்கா, ஓரி கான் மாகாணத்தில், “Atlantis Raising Educational Centre’ என்ற மையம், ரஷ்ய ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை வெளியிட்டது. அதில் இந்த தகவல் காணப்படுகிறது.

புரொக்கொலி (broccoli) எனும் உணவுப் பொருளில் உள்ள மூன்று முக்கிய புற்றுநோய்த் தடுப்பு ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் (antioxidants) ஆவியில் வேக வைப்பதை விட மைக்ரோ வேவ் அவனில் வேக வைக்கும் போது மிக அதிக அளவில் நஷ்டப்படுவதாக Dr.Christina Garcia-Viguera சோதித்து அறிவிக்கிறார்.
ஆன்டியாக்ஸிடென்டும் அதன் நஷ்ட விகிதமும்

ஆவியில்
மைக்ரோவேவ் அவனில்
flavonoids
11%
97%
sinapics
0%
74%
caffeoyl-quinic derivatives
8%
87%

மைக்ரோ வேவ் அவனில் சூடாக்கப்படும் பால் பாதிப்படைகிறது .குறிப்பாக அதில் உள்ள lysozyme என்ற பொருள். இது பாக்டீரியா தொற்றிலிருந்து நம்மை பாதுகாப்பது.

மைக்ரோவேவால் அழிக்கப்படும் மற்றொரு ஊட்டசத்து விட்டமின் B-12 என 1998 ல் ஜப்பனிய அறிவியல் ஆராய்ச்சி செய்திகளில் வெளியான தகவல்.

"குழந்தைகளுக்கான உணவுகள் மைக்ரோவேவுக்கு உட்படுவதால் அதிலுள்ள சில trans-amino acid கள் trans-fatty acid போன்ற செயற்கைப் பொருளாக மாறுகின்றன. அதிலும் L-proline என்ற ஒரு அமினோ அமிலம் நரம்பு மண்டலத்தையும் சிறுநீரகத்தையும் பாதிக்கும் ஒரு வகை விஷப்பொருளாக மாறுகிறது."1989 ல் வெளியான Lancet மருத்துவ சஞ்சிகையில் Dr. Lita Lee இவ்வாறு எழுதியிருக்கிறார்.

ஒரு சின்ன சோதனை செய்து பாருங்கள். இரண்டு பானைகளில் தாவர விதைகளைப்போட்டு ஒன்றில் சாதா தண்ணீரையும், மற்றொன்றில் மைக்ரோ வேவில் சூடாக்கியத் தண்ணீரையும் விட்டு விதைகள் முளைக்கிறதா என பாருங்கள். மைக்ரோ வேவ் தண்ணீரில் விதைகள் முளைக்காதாம். செடியானாலும் வாடிப் போய்விடும்.

மைக்ரோவேவில் பட்டர் தடவிய பாப் கார்ன் தயாரிக்கும் போது வெளியாகும் புகையில் Diacetyl என்ற வேதிப்பொருள் நுரையீரலை மோசமாகப் பாதிக்கிறது. பால் பொருட்கள் , வைன் ஆகியவற்றிலும் இது உருவாகிறது.

 Induction cooker -ன் செயல் பாடு அடிப்படையில் micro wave oven போல இருந்தாலும் ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது. micro wave oven -ல் பாத்திரம் சூடாவதில்லை ,உணவின் நீர் மூலக்கூறு தான் சூடாகிறது.இதில் தான் மேற்கண்ட பாதிப்பு உள்ளது.
ஆனால் Induction cooker-ல் அடுப்பு சூடாவதில்லை.ஆனால் அதன் மீது வைப்பட்ட இரும்பு அல்லது காந்ததால் ஈர்க்கப்படும் உலோக பாத்திரத்தை மின் காந்த அலைகள் வெப்பமடையச்செய்கின்றன. அதனால் சாதாரண அடுப்பில் சமைப்பது போலவே உள்ளே இருக்கும் உணவு சூடாவதால் மேலே சொன்ன மைக்ரோ வேவ் அவனுக்குள்ள பிரச்சனை Induction cooker-ல் இல்லை


எனினும் இதயத்தில் பேஸ் மேக்கர் பொருத்தியவர்களும், அரிதாக மைக்ரோவேவுக்கு சென்சிட்டி உடையவர்களும் இண்டக்சன் ஸ்டவ் ஆனாலும் ,மொபைல் போன் ஆனாலும் பார்த்து ,கேட்டு உபயோகிக்க வேண்டும்.

இவ்வளவு பின்விளைவுகளை ஏற்படுத்தும் மைக்ரோவேவ் அவன்களை பயன்படுத்துவதை அறவே தவிர்க்க முடியாவிட்டாலும் கொஞ்சம் குறைத்துக் கொள்ளவாவது முயற்சி செய்வது நமக்கும்,நம் குடும்பத்தினருக்கும் நன்மை பயக்கும்.

2 comments:

Shameed said...

அறியாத அறிய செய்திகள்,நன்றி அதிரை பூங்கா

அதிரைபூங்கா said...

தங்களின் கருத்துக்கு நன்றி!

Your Comments Please!

இது பற்றிய உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்.Comments பதிவதில் சிரமம் ஏற்பட்டால் உங்கள் கருத்துக்களை adiraipoonga@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனே பதியப்படும்.