ஆயில் ஆயுளைக் குறைக்கும்



ஆயில் ஆயுளைக் குறைக்கும்-இது புதுமொழி.

ஆம், இன்று மனிதனுக்கு வரும் பல நோய்களுக்கு மூலகாரணம் எண்ணெய் கலந்த உணவுகள் தான்.

நம் உடல் இயக்கத்திற்கு தேவையான எச்.டி.எல்(HDL) நல்ல கொலஸ்ட்ராலை எந்த கொழுப்பு உணவின் துணையும் இல்லாமல்,நம் கல்லீரல் தாமாகவே
உற்பத்தி செய்து கொள்ளும்.

நாம் உண்ணும் கொழுப்புச்சத்து மிக்க உணவுகள் நம் உடலில் எல்.டி.எல்(LDL) கெட்ட கொலஸ்ட்ராலை அதிகப்படுத்துகின்றன.எனவே உணவு எதுவாயினும் அளவாக பயன்படுத்துதல் நல்லது.

எல்லா எண்ணெயும் கொழுப்பு தான். நெய், வெண்ணெய், டால்டா, தேங்காய் எண்ணெய், பாமாயில் போன்ற எண்ணெய்கள் நேரடியாக கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தும்.

சூரியகாந்தி போன்ற மற்ற எண்ணெய்கள் ஈரல் வழியாக சென்று, கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தும். எனவே எண்ணெய் எதுவாயினும் அளவாக பயன்படுத்துதல் நல்லது.

ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு 15 மி.லி- 20 மி.லி. என்று ஒரு மாதத்திற்கு அரை லிட்டர் தான் பயன்படுத்த வேண்டும்.

எண்ணெய் எப்படி கலோரியை அதிகப்படுத்துகிறது என்றால்,

உணவு
கலோரிகள்
10 மி.லி. எண்ணெய்
90 கலோரிகள்
ஒரு சாதா தோசை
80
ஒரு பூரி
260
வடை, பஜ்ஜி, சிப்ஸ் போன்றவை
200 - 250
பிரியாணி
6,550
ஒரு பிளேட் பிரியாணி
1,600 கலோரிகள்

உள்ளன. அதிக எண்ணெய் இரத்த குழாய்களில் படிவதால் இரத்த குழாய் அடைப்பு ஏற்படுகிறது.

அதிக எடை, அதிக கொலஸ்ட்ரால், கல்லீரல் பாதிப்பு, இதய நோய், இரத்த குழாய் அடைப்பு, சர்க்கரை நோய் ஆகியன ஏற்படுகின்றன.

பாரம்பரிய எண்ணெய்கள் பல இருந்தாலும் கொழுப்புச்சத்து மிகவும் குறைவாக உள்ள எண்ணெயை கவனமாக தேர்ந்தெடுத்து 15 - 20 மி.லி. வரை பயன்படுத்தலாம். 

திரும்ப திரும்ப சூடுபடுத்தப்பட்ட எண்ணெயில், சமைக்கப்பட்ட பலகாரங்கள் கேன்சரை ஏற்படுத்தும். 

உணவில் எண்ணெய் காரணமாகவே கலோரி அதிகமாகிறது. அதிக கலோரி கொழுப்பாக மாறி வயிற்றில் படிகிறது. இதுதான் தொப்பையாகும், உடல் எடை கூடுவதற்கு முன் தொப்பை வரும். தொப்பையிலுள்ள கொழுப்பு கரைந்து கெட்ட கொழுப்பாக மாறுகிறது. அது ரத்தக் குழாயை அடைத்து மாரடைப்பு ஏற்படுத்துகிறது.

வளரும் குழந்தைகளுக்கும், இளம் வயதினருக்கும் பாரபட்சம் பார்க்காமல் எண்ணெயில் வறுக்கப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது.  

எண்ணெய் பலகாரங்கள் மற்றும் இனிப்புகளில் கலோரி அதிகம் (400 - 600). எனவே நடை, உடற்பயிற்சி இல்லாமல் அதிக கலோரி உணவுகளை உண்பது பிரச்சினை. அதிலும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இரத்தக் குழாயும், இரத்தமும் பாதித்து அடைப்பை ஏற்படுத்துகின்றன. சைவ உணவு உண்பவர்கள் தேங்காய் பால், தயிர் அதிகம் பயன்படுத்தக் கூடாது.


எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளில் கலோரிகள்
உணவு
கலோரிகள்
இரண்டு சமோசா
256 கலோரிகள்
இரண்டு போண்டா
283
மிக்ஷர் 100 கிராம்
520
பகோடா 100 கிராம்
474
இரண்டு வறுத்த மீன்
256
இரண்டு வடை
243
முறுக்கு 100 கிராம்
529
உருளை சிப்ஸ் 100 கிராம்
569
சில்லி சிக்கன் 100 கிராம்
589 கலோரிகள்

நமது இரத்தத்தில்
மொத்த கொலஸ்ட்ரால்
200 மி.கி-க்கு கீழ் 
எல்.டி.எல்(கெட்ட) கொலஸ்ட்ரால்
100 மி.கி-க்கு கீழ்
எச்.டி.எல்(நல்ல)   கொலஸ்ட்ரால்
                                         ஆண்களுக்கு
                                     பெண்களுக்கு


40 மி.கி-க்கு மேல்
50 மி.கி-க்கு மேல்
வி.எல்.டி.எல் கொலஸ்ட்ரால்

30 மி.கி-க்கு கீழ் 

என கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும்.

மேலும் யாருக்கு கொலஸ்ட்ரால் இருக்குமென, உருவத்தை வைத்து கூற முடியாது. சாதாரணமாக பலர் வாகனங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கூட உடலுக்கு கொடுப்பது இல்லை. 

வருடத்திற்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்வது நல்லது.மருத்துவரின் ஆலோசனையை தவறாமல் பின்பற்றுவதும் அவசியம்.

எனவே கொழுப்புச்சத்து மிகவும் குறைவாக உள்ள, தரமான எண்ணெயை அளவோடு பயன்படுத்தி வளமாக வாழ்வோம்!

0 comments:

Your Comments Please!

இது பற்றிய உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்.Comments பதிவதில் சிரமம் ஏற்பட்டால் உங்கள் கருத்துக்களை adiraipoonga@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனே பதியப்படும்.