நோன்பு




ரமழான் மாதத்தின் சிறப்புகள்:
  • நரகத்தின் கதவுகள் மூடப்படும். அதில் ஒரு கதவும் திறந்திருக்காது.(திர்மிதீ)
  • சுவர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படும், அதில் ஒரு கதவும் மூடப்பட்டிருக்காது. (திர்மிதீ)
  • ரமழான் (மாதம்) வந்துவிட்டால் அருள்களின் வாசல்கள் திறக்கப்படுகின்றன.(நஸயீ)
  • ரமழான் மாதத்தின் முதல் இரவிலேயே ஷைத்தான்களுக்கும் கெட்ட ஜின்களுக்கும் விலங்கிடப்படும்.(திர்மிதீ)
  • ஒரு இறை அழைப்பாளர் “நன்மை செய்பவர்களே! முன் வாருங்கள், பாவம் செய்பவர்களே! நிறுத்திக் கொள்ளுங்கள்!” என்று உரக்கச் சொல்வார். (திர்மிதீ)
  • அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமழான் மாதத்தில் யார் நோன்பு நோற்கின்றாரோ அவரின் முன் சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும்.(புகாரி)
  • நோன்பு மாதத்தில் உம்ராச் செய்வது ஹஜ் செய்வதற்குச் சமமாகும். (நஸயீ)
  • ஆயிரம் மாதங்களை விட மகத்துவமிக்க ஓர் இரவு (லைலத்துல் கத்ர்) இம்மாதத்தில் தான் இருக்கிறது.
  • ரமழானின் கடைசி இரவில் நோன்பாளிகளுக்கு மன்னிப்பு வழங்கப்படுகின்றது
  • ரமழானின் ஒவ்வொரு இரவிலும் அல்லாஹ் நரகிலிருந்து சிலரை விடுதலை செய்கின்றான். (இப்னுமாஜா)
  • புனிதமிக்க அல்-குர்ஆன் ரமழானில் தான் இறக்கியருளப்பட்டது. (2:185) 
நோன்பு நோற்பதன் சிறப்புகள்
  • நோன்பு கெட்ட செயல்களில் இருந்து பாதுகாக்கும் (புகாரி)
  • நோன்பு நரகத்திலிருந்து பாதுகாக்கும் ஒரு கேடயமாகும். (அஹ்மத்)
  • நோன்பு சுவர்கத்திற்குள் நுழைவதற்கு காரணமான அமலாக இருக்கிறது (நஸயீ)
  • நோன்பு அல்லாஹ்விடத்தில் பரிந்துரை செய்யும் (அஹ்மத்)
  • நோன்பாளிகள் மட்டுமே ரய்யான் என்னும் வாசல் வழியாக சுவனத்திற்குள் பிரவேசிப்பார்கள் (புகாரி)
  • நோன்புக்குரிய கூலியை அல்லாஹ்வே கொடுக்கின்றான். (திர்மிதி)
  • நோன்பு தக்வாவுக்கு (அல்லாஹ்வை பயப்படுவதற்கு) முக்கிய காரணமாக அமைகின்றது. (2:183)
  • நோன்பாளியின் வாய்வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரி வாடையை விட மிக நறுமணமுள்ளது. (புகாரி)
  • நோன்பாளிகள் நோன்பு திறக்கும் வரை அவருக்காக மலக்குகள் பாவமன்னிப்பு தேடுகின்றனர்.
  • நோன்பாளிகளின் பிரார்த்தனைகள் அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. (பைஹகி)
நமது நோன்புகள் ஏற்றுக்கொள்ளப்படவேண்டுமா?

பொய்யுரைப்பது, புறம் பேசுவது, கோள் சொல்வது, பழி சுமத்துவது… போன்ற அனைத்து தீமையான காரியங்களை விட்டும் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும்.

யார் பொய்யான பேச்சுக்களையும், அவற்றை நடைமுறைபடுத்துவதையும் விட்டுவிடாமல் அவர் பசித்திருப்பதோ, அல்லது தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவை இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(ஆதாரம்: புகாரி, அஹ்மத், திர்மிதி)

நாம் நல்லவர்களாக வாழ்வதற்காக அல்லாஹ் நமக்கு வருடா வருடம் தரும் ஒருமாத பயிற்சியாகும் இந்த ரமலான் மாதம். ரமலானைப் போலவே ஏனைய காலங்களிலும் பேணுதலுடன் வாழ அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் செய்வானாக!

நோன்பை முறிக்கக் கூடியவைகள்: -
  • வேண்டுமென்றே உண்ணுதல், பருகுதல்
  • நோன்புடன் பகலில் உடலுறவு கொள்ளுதல் (இவர்களுடைய நோன்பு பாலாகிவிடும். குற்றப்பரிகாரமாக ஒரு அடிமையை விடுதலை செய்ய வேண்டும். முடியாத போது தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும். இதுவும் முடியாத போது அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்)
  •  மாதவிடாய் அல்லது மகப்பேறு இரத்தம் வெளியாகுதல்
  •  வேண்டுமென்றே வாந்தி எடுத்தல் (தானாக வெளியேறினால் நோன்பு முறிய மாட்டாது)
  • இரத்ததானம் போன்றவற்றிக்காக இரத்தம் வெளியேற்றுதல்
  • நரம்பு வழியாக சத்தூசி போன்றவற்றை உட்கொள்ளுதல்
  • மதம் மாறுதல் (அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாகவும்)
கீழுள்ள விடயங்களால் நோன்பு முறியாது: -
  • மறந்த நிலையில் உண்ணுதல், பருகுதல் (புகாரி)
  • குளிப்பு கடமையான நிலையில் ஸஹர் செய்தல் (புகாரி)
  •  கடுமையான வெப்பத்தில் குளித்தல் (அஹ்மத், அபூதாவுத்)
  •  நறுமணம் வாசனை சோப்புகளை உபயோகித்தல்
  •  பற்பசை உபயோகித்து பல் துலக்குதல்
  • வாய் மூக்கு வழியாக இரத்தம் வெளியாகுதல்
  •  இரத்தப் பரிசோதனைக்காக குறைவான இரத்தம் எடுத்தல், நோய் காரணமாக அவசியமேற்படின் ஊசி மருந்தேற்றல் போன்றவை. (சக்திக்காக ஊசி வழியாக ஏற்றப்படும் குளுகோஸ் போன்றவற்றினால் நோன்பு முறிந்து விடும்)
  •  நோன்புடன் சுய நாட்டமின்றி ஸ்கலிதமாகுதல்
  • தொண்டைக் குழியை அடையாதபடி உணவை ருசி பார்த்தல்
இது போன்ற விடயங்களால் நோன்பு பாதிக்கப்படாது என்பதனை கவனத்தில் கொள்க.

யா அல்லாஹ்! உண்மையான விசுவாசத்தோடும், உன்னிடம் நன்மையை எதிர் பார்த்தவர்களாகவும் இந்த ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று பாவக்கறைகளிலிருந்து நீங்கியவர்களாக மாறுவதற்கு நீயே எம் அனைவருக்கும் அருள் செய்வாயாக!!

ஆக்கம்: மௌலவி M.J. முஹம்மது லாஃபிர் மதனி.

0 comments:

Your Comments Please!

இது பற்றிய உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்.Comments பதிவதில் சிரமம் ஏற்பட்டால் உங்கள் கருத்துக்களை adiraipoonga@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனே பதியப்படும்.